Wednesday, July 5, 2017

யோக சூத்திரம் - 1.5 - ஐந்து வித மன கிலேசங்கள்

யோக சூத்திரம் - 1.5 - ஐந்து வித மன கிலேசங்கள்


वृत्तयः पञ्चतय्यः क्लिष्टाक्लिष्टाः ॥५॥

vr̥ttayaḥ pañcatayyaḥ kliṣṭākliṣṭāḥ ॥5॥

வ்ருத்தாய பன்கட்டாயா கிலேசமும் மன கிலேசமும்

vr̥ttayaḥ = வ்ருத்தாய = சலனங்கள்

pañcatayyaḥ = பன்கட்டாயா = ஐந்து விதமான

kliṣṭākliṣṭāḥ  = கிலேசமும், அகிலேசமும்

ஐந்து விதமான சலனங்கள் (தவறான எண்ணங்கள்) உள்ளன. அவற்றுள் சில நல்லவை, மற்றவை அல்லாதவை. 

நமக்குள் பல எண்ணங்கள் தோன்றி , தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. நம்மை சுற்றியுள்ள உலகம் நமக்குள் இந்த எண்ணங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த எண்ண அலைகளை ஐந்து நல்லவை என்றும், ஐந்து நல்லவை அல்லாதவை என்றும் பிரிக்கிறார்கள்.

கிலேசம் - நல்லவை இல்லாதவை

அகிலேசம் = நல்லவை (அகிலேஷ் என்று பெயர் உண்டு)

அவை என்ன கிலேசம் ? கிலேசம் என்றால் துன்பம் தருபவை, மன அழுத்தம் தருபவை,  உண்மையை மறைப்பவை, தெளிவற்றவை.

அகிலேசம் = சுகமானவை, இதம் தருபவை, தெளிவானவை, உண்மையை காட்டுபவை.

இந்த கிலேசம், அகிலேசம் என்ற இரட்டை சொற்களை

கெட்டவை , நல்லவை
துன்பம் தருபவை, இன்பம் தருபவை
குழப்பமானவை, தெளிவானவை
அறிவில்லாதவை, அறிவு சார்ந்தவை

என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொன்றிலும் ஐந்து இருக்கின்றன. அவை என்னென்ன, அவற்றை எப்படி மாற்றலாம் என்றெல்லலாம் பின்னால் வரும் சூத்திரங்களில் சொல்லப் போகிறார்.

நாம் இந்த உலகை, அதில் உள்ள மனிதர்களை, பொருள்களை அவை இருக்கும்படியே காண்பது இல்லை. நம் சித்தம் எப்படி இருக்கிறதோ அதன் படி காண்கிறோம்.

ஒரே ஆள் ஒருவனுக்கு நல்லவனாகவும் மற்றொருவனுக்கு கெட்டவனாகவும் தெரிகிறான். எப்படி. அவனவன் சித்தத்தை பொறுத்தது.

முதல் நான்கு சூத்திரங்களில், நாம் இந்த உலகை உள்ளபடியே காண்பது இல்லை என்று கூறினார்.

இந்த ஐந்தாவது சூத்திரத்தில், எப்படி எல்லாம் நம் சித்தம் அலை பாய்கிறது என்று  கூறுகிறார்.

அடுத்து வரும் சூத்திரங்களில் அதை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று கூறப் போகிறார்.

இந்த மொத்த முயற்சியும் நாம் யார் என்ற உண்மையை அறிந்து கொள்ளத்தான்.

சமாதி நிலை அடைவதுதான் யோக சாத்திரத்தின் நோக்கம். குறிக்கோள்.

சமாதி என்றால் ஏதோ இறந்து போவது. குழிக்குள் வைத்து மேலே கல்லை வைத்து மூடுவது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

பின் சமாதி என்றால் என்ன ?

ஏன் சமாதி அடைய வேண்டும் ?

சிந்திப்போம்.


No comments:

Post a Comment