Saturday, August 24, 2019

யோக சூத்திரம் - 2.51 - பிராணாயாமத்தை கடந்து

யோக சூத்திரம் - 2.51 - பிராணாயாமத்தை கடந்து 

बाह्याअभ्यन्तर विषयाक्षेपी चतुर्थः ॥५१॥

(bahya abhyantara vishaya akshepi chaturthah)

bāhya = வெளிவிடுதல்
abhyantara = உள்ளிழுத்தல்
viṣayā = விஷயம்
ākṣepī = அவற்றை கடந்து , அதையும் தாண்டி
caturthaḥ = நான்காவது

உள் இழுப்பது, வெளியே விடுவது, இடையில் மூச்சை நிறுத்துவது என்ற மூன்று நிலைகளை பார்த்தோம்.

இவற்றை தாண்டி, நான்காவதாக ஒன்று இருக்கிறது உஎன்று பதஞ்சலி கூறுகிறார்.

ஆனால், அது என்ன என்று அவர் கூறவில்லை.

இந்த மூன்றையும் கடந்தால்தான் அது புரியும் என்று விட்டு விட்டார் போல் இருக்கிறது.

நீண்ட இடைவெளி விட்டு விட்டு எழுதுவதால்இதுவரை என்ன படித்தோம், எங்கே விட்டோம் என்ற  சிக்கல் இருக்கலாம்.

எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றை ஒரு தொகுப்பாக தர எண்ணம்.

ஏன் என்றால்,  இந்த சுலோகம் தாண்டி, பதஞ்சலி வேறு ஒரு புதிய உலகுக்கு நம்மை அழைத்துச் செல்ல இருக்கிறார்.

அங்கே போகும் முன், இதுவரை படித்தவற்றை ஒரு முறை சிந்தித்து விடுவோம்.

என்ன , சரியா ?

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/251.html

Friday, August 16, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 6

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 6

बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥

bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

இந்த மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி இதெல்லாம் எப்படி செய்வது.. அதற்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா ?

எவ்வளவு நேரம் இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும், எவ்வளவு நேரம் விட விடும், பின் எவ்வளவு நேரம் வெற்றிடமாக வைக்க வேண்டும் ?

இது பற்றி ஏதாவது கணக்கு இருக்கிறதா என்றால் இருக்கிறது.

அதுவும் இந்த ஸ்லோகத்திலேயே

vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

அது தான் கணக்கு.

அந்த கணக்கை நாளை பார்க்கலாமா ?

என்ற கேள்வியோடு நேற்று முடித்து இருந்தோம். இன்று தொடர்வோம்

இந்த மூச்சு பயிற்சியை இரண்டாக பிரிக்கிறார் பதஞ்சலி. அந்த இரண்டிலும் இரண்டு உட்பிரிவுகள். மொத்தம் நாலு வகை.

முதல் பெரும் பிரிவு - இடம் மற்றும் காலம்

அது என்ன இடம் , காலம்.

நீங்கள் மூச்சை வெளியே விடும் போது அது எவ்வளவு தூரம் செல்கிறது என்று பாருங்கள். வேகமாக விட்டால் சற்று அதிக தூரம் போகும். மெல்ல விட்டால் அது குறைந்த தூரம் போகும்.  எவ்வளவு தூரம் செல்கிறது அவ்வளவு இடத்தை அது  அடைக்கிறது. அந்த இடத்தை கடக்கிறது.

அதே போல் மூச்சை உள்ளே இழுக்கும் போது எவ்வளவு தூரத்தில் உள்ள காற்றை உள்ளே இழுக்கிறோம் என்று பார்க்க வேண்டும். மெல்ல இழுத்தால் மூக்குக்கு அருகில் உள்ள  காற்று மட்டும் உள்ளே போகும். அது நுரையீரலின் தரையை தொடாது. மேலோட்டமாக கொஞ்சம் நிறையும். அவ்வளவுதான்.

அதே போல, காலம்.

எவ்வளவு நேரம் உள்ளே இழுக்கிறோம்,  இழுத்து வைத்து இருக்கிறோம், எவ்வளவு நேரம் வெளியே விடுகிறோம், விட்ட பின் காலியாக எவ்வளவு நேரம் வைத்து இருக்கிறோம்  இந்த நாலு கால அளவையும் பார்க்க வேண்டும்.

இழுப்பது
இழுத்து உள்ளே வைப்பது
வெளியே விடுவது
விட்டபின் காலியாக வைத்து இருப்பது

சரி, இதை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் இழுக்க வேண்டும், வைக்க வேண்டும், விட வேண்டும், பின் காலியாக வைக்க வேண்டும்?

அடுத்த இரண்டு வார்த்தைகளைப்  பாருங்கள்

paridṛṣṭa - தெரிகிறது
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

அதாவது இந்த மூச்சு இழுத்து விடும் இந்த செயல் வெளிப்படையாகத் தெரியும் (paridrsta) அல்லது மென்மையாக செய்வதே தெரியாமல் இருக்கும் (சூட்சம)

சில பேர் பிராணாயாமம் செய்வதைப் பார்த்தால் ஏதோ கொல்லன் உலையில் காற்று அடிப்பது போல இருக்கும். வேர்க்க விறுவிறுக்க செய்வார்கள்.

யோக சாஸ்த்திரத்தின் அடிப்படையே

ஸ்திரம் - சுலபம்

easy and steady

வலி இருக்கக் கூடாது. ஆசனம் செய்கிறீர்களா ? வலித்தால் நீங்கள் செய்வது தவறு என்று அர்த்தம்.  நடுங்கக்  கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வேண்டும்.

இன்று ஒரு சூரிய நமஸ்காரம். நாளை இரண்டு. என்று     மெதுவாக  ஆரம்பித்து மேலே போக வேண்டும். அது போல உடலை தயார் செய்ய  வேண்டும். நேரே போய் , பணம் கட்டியாச்சு , நாளை முதல்  108 சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கக் கூடாது.

இந்த மூச்சுப் பயிற்சியும் அப்படி இருக்க வேண்டும். ஸ்திரம் சுலபம்.

வெளிப்படையாக இருந்து சூட்சுமமாக மாற வேண்டும். செய்வதே தெரியக் கூடாது.

வேலை செய்யும் போதும் இந்த மூச்சு பயிற்சி தொடரலாம். சமைக்கும் போது, குளிக்கும் போது, நடை பயிலும் போதும் இது பாட்டுக்கு தொடரலாம்.

இந்த நான்கையும் தாண்டி பிராணாயாமத்தில் அடுத்த ஒன்றை சொல்கிறார் பதஞ்சலி.

அது அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது.

இந்த  சுலோகம் இதோடு முற்றுப் பெறுகிறது.

மனதுக்குள் உள் வாங்கி, முயற்சி செய்து பாருங்கள்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-5_16.html

----------------------------------------------------------------------

முதல் ஐந்து பகுதிகளை இங்கே காணலாம்

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-5.html

------------------------------------------------------------------------------------
முதல் நான்கு   பகுதிகளை கீழே காணலாம்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-4.html

முதல் மூன்று  பகுதிகளை கீழே காணலாம்.

------------------------------------------------------------------------------
பாகம் 3

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html

----------------------------------------------------------------------------------------------
பாகம் 2

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

Thursday, August 15, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 5

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 5

बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥

bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

இப்படி மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டால் என்ன நிகழும். சும்மா பொழுது போகவில்லை என்றால் இப்படி ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டிருக்கலாமே தவிர, இப்படி மூச்சை வித விதமாக விடுவதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?

நம் வறுமை தீருமா ? உடல் வலி குறையுமா? புகழும் பெருமையும் வருமா ? வங்கியில் இருப்பு உயருமா ?

பலன் இல்லாமல் ஒரு காரியமும் செய்யக் கூடாது.

பிராணாயாமம் செய்பவர்களை கேட்டால், "அது உடலுக்கு நல்லது, மனம் அமைதியாகி இருக்கிறது என்றெல்லாம் சொல்லுவார்கள்". கொஞ்சம் அழுத்திக் கேட்டால், "இப்பத்தான் ஆரம்பித்து இருக்கிறேன்...போகப் போகத்தான் தெரியும்" என்று நழுவுவார்கள்.

நம் வாழ்வின் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம், நம் மனம் தான்.

இல்லாததை இருப்பதாய் எண்ணிக் கொண்டு கவலைப் படுகிறது, சண்டை போடுகிறது. (அவ அப்படி நினைச்சுத்தான் சொல்லி இருப்பாள் )

இருப்பதை இல்லாதாதாய் எண்ணிக் கொண்டு கவலைப் படுகிறது. சிலருக்கு எவ்வளவு   வசதி இருந்தாலும், ஏதோ ஒன்றை சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

கற்பனைகளை வளர்த்துக் கொண்டு வருத்தப்படும் (எப்படியெல்லாம் அவனை வளர்த்தேன், கடைசியில் இப்படி பண்ணிட்டானே)

எதிர்பார்ப்புகளினால் ஏமாறும்.

சில சமயம் ஏன் இந்த கவலை, துன்பம், குழப்பம் என்று அறியாமல் தடுமாறும்.

அனைத்துக்கும் மனம் தான் காரணம்.

அந்த மனம், மூச்சோடு நெருங்கிய சம்பந்தம் கொண்டது.

நம்மால் மனதை நேரடியாக கட்டுப் படுத்த முடியாது. மனதை அடக்குகிறேன் என்று ஆரம்பித்தால் அது விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.

மூச்சை கட்டுப் படுத்தினால் மனம் கட்டுப் படும்.

நம்மால் மூச்சை கட்டுப் படுத்த முடியும்.

அது எப்படி மூச்சை கட்டுப்படுத்தினால் மனதை கட்டுப் படுத்த முடியும் ?

ஒரு சோதனை செய்து பாப்போம்.

சும்மா கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் இருங்கள். ஒரு ஆசனம், இடம், பொருள் ஒன்றும் வேண்டாம். சும்மா கண்ணை மூடி இருங்கள்.

ஒரு நிமிடம் கழித்து கண்ணை திறவுங்கள். உங்கள் மனம் என்னவெல்லாம் நினைத்தது என்று யோசித்துப் பாருங்கள்.

ஒன்றை விட்டு  ஒன்றாய் மனம் ஓடிக் கொண்டே இருப்பது தெரியும்.

இப்போது, மீண்டும் கண்ணை மூடுங்கள். மூடிய பின், மூச்சை இழுத்து நிறுத்துங்கள்.

மன ஓட்டம் எல்லாம் நின்றுவிடும். எப்படா அடுத்த மூச்சை எடுப்பான் என்று கவனம் முழுவதும் அங்கே போகும். மூச்சை விடுங்கள்.  இழுக்காதீர்கள். மீண்டும் மனம் மூச்சிலேயே கவனமாய் இருக்கும்.

அது சரி தான், மூச்சு நின்று போனால், மனம் பதறத்தான் செய்யும். இதில் என்ன பெரிய  வித்தை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

வருகிறேன்.

அடுத்த படிக்கு போவோம்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது , உங்கள் மூச்சு எப்படி இருக்கிறது என்று  கவனியுங்கள்.  அது சன்னமாக இருக்கும். சட்டென்று  உள்ளே போய் , சட்டென்று வெளியே வரும்.

நீங்கள் சோகமாக இருக்கும் போது எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள்.

அது நீண்ட பெரு மூச்சாக இருக்கும். மெல்லமாக இழுத்து , மெல்லமாக விடுவீர்கள்.

ஒரு முறை, கொஞ்சம் கவலையாக இருக்கும் போது , வேக வேகமாக மூச்சை இழுத்து  வெளியே விட்டுப் பாருங்கள். கவலை போய் விடும்.

அதே போல், சந்தோஷமாக இருக்கும் போது, மெதுவாக மூச்சை இழுத்து ,மெல்ல வெளியே விட்டுப் பாருங்கள். சந்தோஷம் போய் மெல்லிய சோகம் வந்து விடும்.

நம் உணர்ச்சிகள் நம் மூச்சை பாதிக்கின்றன என்று தெரிகிறது அல்லவா ?

நான் கூறியது இரண்டு உதாரணங்கள் தான். ஒவ்வொரு உணர்ச்சிக்கும், ஒரு விதமான மூச்சோட்டம் இருக்கும்.

கணவனோ, காதலனோ, அன்போடு கையைப் பற்றும் போது மூச்சு மாறும். பட படப்பாக இருக்கும்.

அதே கணவனோ, காதலனோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , படுக்கையில் இருக்கும் போது கையை பிடித்தால், மூச்சு வேறு மாதிரி இருக்கும்.

உணர்வுகள், மூச்சை பாதிக்கும்.

யோகா கண்டு பிடித்த மிகப் பெரிய விஷயம் என்ன என்றால் மூச்சு உணர்ச்சிகளை பாதிக்கும்.

உங்களுக்கு சந்தோஷமாக இருக்க வேண்டுமா, நிமிர்ந்து உட்காருங்கள் (முதுகு நேராக வேண்டும்), சற்று வேக வேகமாக மூச்சை இழுத்து விடுங்கள்.

உங்களுக்கு சோகமாக இருக்க வேண்டும், முதுகு லேசாக வளைந்து, தலை சற்று கவிழ்ந்து, மெல்லமாக நீண்ட மூச்சாக உள் இழுத்து மெல்ல வெளியே விடுங்கள். இரண்டு நிமிடத்தில் சோகம் வந்து விடும்.

எனவே, மூச்சைக் கட்டுப் படுத்தினால், உணர்ச்சிகளை கட்டுப் படுத்தலாம்  என்பது  யோகாவின் அடிப்படை உண்மை.

மனதை ஒருமுகப் படுத்தி படிக்க வேண்டுமா,  வேலை செய்ய வேண்டுமா, பரீட்சை எழுத வேண்டுமா,  விளையாட்டில் வெல்ல வேண்டுமா,  மனதில் தெளிவு வேண்டுமா ...மூச்சை கட்டுப் படுத்தினால் போதும். மனம் வசப்படும்.

அடுத்த கேள்வி வரும், சரி ஒத்துக் கொள்கிறேன், மூச்சைக் கட்டுப் படுத்தினால்  மனம் கட்டுப் படும் என்று புரிகிறது.

இந்த மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி இதெல்லாம் எப்படி செய்வது.. அதற்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா ?

எவ்வளவு நேரம் இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும், எவ்வளவு நேரம் விட விடும், பின் எவ்வளவு நேரம் வெற்றிடமாக வைக்க வேண்டும் ?

இது பற்றி ஏதாவது கணக்கு இருக்கிறதா என்றால் இருக்கிறது.

அதுவும் இந்த ஸ்லோகத்திலேயே

vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

அது தான் கணக்கு.

அந்த கணக்கை நாளை பார்க்கலாமா ?

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-5.html

------------------------------------------------------------------------------------
முதல் நான்கு   பகுதிகளை கீழே காணலாம்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-4.html

முதல் மூன்று  பகுதிகளை கீழே காணலாம்.

------------------------------------------------------------------------------
பாகம் 3

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html

----------------------------------------------------------------------------------------------
பாகம் 2

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

Tuesday, August 13, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 4

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 4

बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥

bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

பிராணன் என்ற உயிர் சக்தி நம்மை செலுத்துகிறது என்பதை பார்த்தோம். அதை நாம் கண்கூடாகவும் அறிய முடிகிறது.

அந்த உயிர் சக்தி எந்த அங்கத்தில் அதிகம் செல்கிறதோ, அந்த அங்கம் தூண்டப் படுகிறது.  ஓடுகிறோம் என்றால், காலுக்கு அதிகமான உயிர் சக்தி தேவைப்படும். உயிர் சக்தி என்றால் பிராணவாயு மட்டும் அல்ல, நாம் உண்ணும் உணவில் உள்ள சக்தி எல்லாம் சேர்ந்துதான்.

இந்த உயிர் சக்தி அவயங்களில் வேலை செய்ய வேண்டும் என்றால், அதற்கு பிராண வாயு தேவை.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். நன்றாக உடற் பயிற்சி செய்து உடலை திடமாக வைத்திருங்கள். ஒரு நிமிடம் மூச்சை நிறுத்திப் பாருங்கள். உடல் பதறிப் போய் விடும். ஒரு வேலையும் செய்ய முடியாது. அனைத்தும் நின்று விடும்.

எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், ஒரு நிமிடம் மூச்சு விடாமல் இருக்க முடியாது. பயிற்சி செய்யலாம் ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ மூச்சை அடக்க. அவ்வளவுதான் முடியும். மேலும், மூச்சை அடக்கி வித்தை காட்டினாலும், வேலை ஒன்றும் செய்ய முடியாது.

எனவே, புலன்கள் வேலை செய்ய, உயிர் சக்தி தேவை.

அந்த உயிர் சக்திக்கு, பிராண வாயு தேவை.

கவனமாக வாசியுங்கள். அடுத்த முடிச்சு இங்கே வருகிறது.

இந்த பிராண வாயு உடலின் எந்த பகுதிக்கு அதிகம் செல்கிறதோ, அந்த பகுதி முனைப்பாக செயல்படும்.

அனைத்து அவயங்களுக்கும் ஒரே மாதிரி சென்றால், அனைத்து புலன்களும் ஒரு புள்ளியில் நிற்கும்.

ஒரு குச்சியை எடுத்து நீள வாக்கில் உங்கள் ஆள் காட்டி விரலின் மேல் நிற்க வைக்கப் பாருங்கள்.  குச்சியின் நடுவில் நிறுத்தினால், குச்சி அங்கும் இங்கும் அசையாமல்  அப்படியே இருக்கும். கொஞ்சம் அந்தப் பக்க, அல்லது இந்தப்பக்கம்   மாற்றி வைத்தால், குச்சி கீழே விழுந்து விடும் அல்லவா?

அது போல, அனைத்து புலன்களுக்கும் சமமாக பிராண வாயு சென்றால், உடல் ஒரு புள்ளியில் நிற்கும். equilibrium என்று சொல்லுவார்களே அது.

இந்த பிராண வாயு அனைத்து அவயங்களும் ஒரே மாதிரி செல்லாமல் இருக்கக் காரணம், நாம் நம் உடலுக்கு தேவையான முழுமையான அளவு பிராண வாயுவை  சுவாசிப்பது இல்லை.

அதன் அளவு குறையும் போது , உடல் தானாகவே இருக்கின்ற அளவு பிராண வாயுவை அங்கங்களுக்கு பங்கிட்டு கொடுக்கிறது.

இப்படி சமச்சீர் இல்லாத பிராண வாயுவின் ஓட்டத்தால் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு புலன்கள் தூண்டப் படுகின்றன.

சமமாக எப்படி பிராணவாயுவை செலுத்துவது ?

இங்கு வருகிறது இந்த சுலோகம்.

bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

முதலில் பிராண வாயுவை முழுவதுமாக உள்ளே இழுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு. இழுத்து விட்டீர்களா ? அப்படியே நிறுத்துங்கள்.

ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி

ஸ்தம்பம், கும்பம் என்று சொல்கிறார்கள். அதாவது, குடத்தில் நீர் முழுவதும் நிறைந்து இருந்தால், அது தளும்பாது. அது போல நுரையீரல் முழுவதும் பிராண வாயு நிறைந்து இருந்தால், மனம் தழும்பாது.

உட்புறமாக பிராண வாயுவை இழுத்து, நிறுத்த வேண்டும்.

நாம் எப்போதும் நம் நுரையீரல் நிறைய காற்றை உள் இழுப்பது இல்லை. நம் நுரையீரலின் பெரும்பாலான பகுதி உபயோகப் படமால் கெட்டு போய்க் கொண்டிருக்கிறது.

ஆழமாக மூச்சை இழுத்து பயிற்சி செய்ய வேண்டும்.

மூச்சை இழுத்தவுடன், விட்டு விடக் கூடாது. உள்ளே நிறுத்த வேண்டும். நம் இரத்தம், பிராண வாயுவில் நன்றாக குளிக்க வேண்டும். அந்த உயிர் சக்தியை அது  உடல் எங்கும் கொண்டு செல்லும்.

அடுத்தது,

bāhya - வெளிப்புறமாக
stambha - நிறுத்தி

மூச்சை வெளியே விட வேண்டும். விட்டவுடன் உடனே உள்ளே இழுக்கக் கூடாது. "நிறுத்தி" என்கிறார் பதஞ்சலி.  வெளியே விட்டவுடன், கொஞ்ச நேரம் நிறுத்த வேண்டும்.

bahya என்றால் வெளியே விடுவது.
ābhyantara என்றால் உள்ளே இழுப்பது 
stambhaஎன்றால் நிறுத்துவது 
vriti என்றால் செயல்படும் முறை.

இப்படி உள்ளே இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி செயல்படும் முறைக்கு பிராணாயாமம் என்று பெயர். 

சரி, உள்ளே இழுப்பது, வெளியே விடுவது, நிறுத்துவது என்று சும்ம்மா மொட்டையாக சொன்னால் எப்படி? எவ்வளவு நேரம் உள் இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்த வேண்டும், எவ்வளவு நேரம் வெளியே விட வேண்டும், விட்ட பின் எவ்வளவு நேரம் நிறுத்தி வைக்க வேண்டும். அதெல்லாம் சொல்ல வேண்டாமா ?

சொல்லி இருக்கிறார். இந்த ஸ்லோகத்திலேயே சொல்லி இருக்கிறார். 

அது என்ன என்று அடுத்த பகுதியில் காண இருக்கிறோம். 

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-4.html

முதல் மூன்று  பகுதிகளை கீழே காணலாம்.

------------------------------------------------------------------------------
பாகம் 3

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html

----------------------------------------------------------------------------------------------
பாகம் 2

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

Monday, August 12, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 3

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 3

बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥

bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

இந்த சூத்திரத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முன் பிராணாயாமம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் இரண்டு பகுதிகளை கீழே காணலாம்.

முந்தைய பிளாகில் எப்படி பிராணன் நம்மைச் செலுத்துகிறது என்று பார்த்தோம்.

இன்னும் ஆழமாக சிந்திப்போம்.

நமது புலன்கள் வெளி நோக்கி ஓடுகின்றன. வெளியில் இருந்து வரும் விஷயங்கள் நம்மை செயலாற்ற தூண்டுகின்றன.

உதாரணமாக, ஒரு வாலிபன் ஒரு அழகான பெண்ணைப்  பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்குள் என்ன நிகழ்கிறது? கண் விரிகிறது. அவளுடைய முழு அழகையும் இரசிக்கத் தலைப்படுகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. காது மடல் சூடாகும். உடலில், சில அவயங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவனுடைய பிராண சக்தி, உயிர் சக்தி உடலில் சில அவயங்களில் அதிகமாக வேலை செய்கிறது.

உணவைக் கண்டால் நாக்கு தூண்டப் படுகிறது. சக்தி நாக்குக்கு போகிறது.

நல்ல இசையை கேட்டால், காது தூண்டப் படுகிறது. மேலும் ஆர்வமாக கேட்கிறோம்.

சக்தி உடம்பில் ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு அதிகமாக கிடைக்கிறது. மற்ற இடங்களுக்கு கொஞ்சமாக கிடைக்கிறது.

இரத்த ஓட்டம்,  பிராண வாயு, எல்லாம் உடம்பில் ஒரு சில பகுதிக்கு அதிகம் செல்கிறது.

இதனால் அந்த புலன்கள் , சிலவற்றை அனுபவிக்க ஆசைப் படுகிறது.

இலட்டைப் பார்த்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுவது போல.

எப்போது உடலில் உள்ள சக்தி ஒரு சில இடங்களுக்கு அதிகமாக கிடைக்கிறதோ, அந்த இடம் தூண்டப் பெறுகிறது. அது சம்பந்தப் பட்ட ஆசை பிறக்கிறது.

எப்படியாவது அதை அடைய வேண்டும் என்ற உந்துதல் பிறக்கிறது.

அந்த கார் வேண்டும், வீடு வேண்டும், அந்த பெண் வேண்டும்...என்றெல்லாம்  எண்ணம் எழுகிறது.

சக்தியின் சம சீர் இல்லாத ஓட்டத்தால் இது நிகழ்கிறது என்று தெரிகிறதா?

பிராணன், உடல் முழுவதும் சமமாக இருந்தால், ஒரு அவயம் மட்டும் தூண்டப் படுவது  நிகழாது.

உதாரணமாக , ஒரு அழகான பெண்ணை ஒரு 90 வயது கிழவன் பார்க்கிறான் என்று  வைத்துக் கொள்வோம். அவனுக்குள் ஆசை பீறிட்டு எழுவதில்லை. காரணம் என்ன ? அவன் உயிர் சக்தி குறைவாக இருக்கிறது, இருக்கின்ற குறைவான சக்தியும்,  வேறு எதற்கோ பயன்படுகிறது.

பிராணனை சமச் சீராக செய்து விட்டால், புலன்கள் பிய்த்துக் கொண்டு ஓடுவது நிகழாது.

ஒரு புலனுக்கு மட்டும் செல்லும் சக்தியை மடை மாற்றி அனைத்து அவயங்களும்  சமமாக செலுத்தினால் மனம் அங்கும் இங்கும் ஓடாது.

உதாரணமாக, ஒரு கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். காரில் உள்ள   எரி சக்தி நான்கு சக்கரங்களுக்கும் ஒரே மாதிரி சக்தி தந்தால் வண்டி ஒழுங்காக நேரே செல்லும்.

மாறாக, வலது முன் சக்கரத்துக்கு அதிகம் சக்தி சென்று அது மற்ற சக்கரங்களை விட வேகமான சுழன்றால் என்ன ஆகும் ?  வண்டி இடது புறம் திரும்பும்.  அப்படித்தான் வண்டியை திருப்புகிறார்கள். ஒரு புற சக்கரம் வேகமாக சுழன்றாள் தான்   வண்டி திரும்பும். இல்லை என்றால் வண்டி எப்போதும் நேரேயே  சென்று கொண்டிருக்கும்.

நம் உடல் மட்டும் மனம் என்ற வண்டி என்ன செய்கிறது  ?

ஒரு நாள் வலது புறம் ஓடுகிறது. இன்னொரு நாள் இடது புறம். மற்றொரு நாள் முன்னோக்கி. பின்னொருநாள் பின்னோக்கி என்று அங்கும் இங்கும் அலை பாய்கிறது.

இந்த வண்டியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

சக்கரங்களுக்கு செல்லும் சக்தியை ஒரே சீராக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால்  வண்டி ஒரே சீராக நேரே ஓடும்.

சரி, இது சரிதானா என்று எப்படி  அறிந்து கொள்வது? பதஞ்சலி சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள்.  சரி போல பட்டாலும், சந்தேகம் இல்லாமல் இல்லை.

இதை எப்படி சரியா தவறா என்று அறிந்து கொள்வது ?

அதற்கும் பதஞ்சலி வழி சொல்கிறார்.

அது என்ன வழி என்று நாளை பார்ப்போமா?

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html

---------------------------------------------------------------------------
பாகம் 2

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

Saturday, August 10, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 2

बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥

bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

இந்த சூத்திரத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முன் பிராணாயாமம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பிராணன் + யாமம் = பிராணாயாமம்.

பிராணன் என்றால் உயிர் சக்தி. அது மூச்சு மட்டும் அல்ல. இந்த உடலை, மனதை செலுத்தும் சக்தி. மூக்கும், நுரையீரலும் இல்லாத பாக்டீரியா போன்ற  உயிர்களும் செயல்படுகின்றன. அவையும் உண்கின்றன, நகர்கின்றன, இன விருத்தி செய்கின்றன, எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றன.  அவற்றிற்குள்ளும் பிராணன் இருக்கிறது அல்லவா?  எனவே, பிராணன் என்பது மூச்சு மட்டும் அல்ல, அது உயிர் சக்தி, ஒரு உந்து சக்தி.

யாமம் என்பது பதஞ்சலி கூறிய 8  யோகப் படிகளில்  முதல்  படி (பிராணாயாமம் நாலாவது  படி).

1. யாமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணாயாமம்
5. ப்ரத்யாஹாரம்
6. தாரண
7. தியானம்
8. சமாதி

இதில் இந்த பிராணன் என்பது எப்போதும் வெளிச் செல்வது. புலன்களால் தூண்டப்பட்டு வெளி நோக்கிச் செல்வது.

உதாரணமாக, ஒரு லட்டைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. அதை எடுத்து தின்ன வேண்டும் என்று ஆவல் எழுகிறது. நம்மை அதை எடுத்துச் தின்னச் சொல்வது பிராணன். "போ, அதை எடுத்துச் சாப்பிட்டுப் பார், நல்லா இருக்கும்" என்று சொல்கிறது.

இது ஒரு உதாரணம். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல இடம் (அடடா அங்க போய் ஒரு வாரம் தங்கி இருந்தால் எப்படி இருக்கும்), எதிர் பாலினத்தின் மேல் ஒரு ஈர்ப்பு, அவர்களை கவர செய்யும் வேலைகள் என்று நம்மை சதா உந்திக் கொண்டிருப்பது இந்த பிராண சக்தி.

பணம் சம்பாதி, புகழ் சம்பாதி, முடியை டை அடித்துக் கொள், ஜிம்முக்குப் போய் தொப்பையை குறை, படி, பாடு, ஓடு, வேலை செய், சாப்பிடு, என்று நம்மை ஓட வைத்துக் கொண்டே இருப்பது பிராணன்.

இது வரை புரிகிறது அல்லவா ?

இங்கே சற்று நிதானிப்போம்...

ஏன் இந்த பிராணன் நம்மை செலுத்திக் கொண்டே இருக்கிறது ? சாப்பாடு வேண்டும் உயிர் வாழ...அது தவிர இன்னும் எத்தனையோ வழிகளில் இந்த பிராணன் நம்மை அலைக்கழிப்பதை உங்களால் உணர முடிகிறதா?

பிராணன் நம் பிராணனை வாங்குகிறது அல்லவா. ஒரு நிமிடம் நம்மை சும்மா இருக்க விட மாட்டேன் என்கிறது.

வீடு வாங்கு, கார் வாங்கு, பணத்தை இதில் போடு, அதில் போடு, என்று சதா சர்வகாலமும்  நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது.

இது ஏன் இப்படி செய்கிறது?  இந்த விரட்டலில் இருந்து எப்படி தப்பிப்பது? என்று யோசித்தார்   பதஞ்சலி.

ஒரு நிமிஷம் நிம்மதியாய், அமைதியாய் இருக்க விடுகிறதா? இப்படி வாழ் நாள் எல்லாம ஓடிக் கொண்டே இருந்தால், நாம் தளர்ந்து போவோம் அல்லவா?

ஒவ்வொரு  கால கட்டத்திலும் எதையாவது ஒன்றை துரத்திக் கொண்டு இருக்கிறோம்.

பொம்மை, பின் படிப்பு, மார்க், பின் வேலை, பின் துணை நாடி ஓட்டம், பின் பிள்ளை வேண்டி ஓட்டம், பிள்ளைகளை வளர்க்க ஓட்டம், இதற்கு நடுவில் பணம், புகழ், செல்வம், செல்வாக்கு என்று தனி ஓட்டம்...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு ஒன்றின் பின், நாளை மற்றொன்றின் பின்னால்...

இந்த ஓட்டத்தை எப்படி நிறுத்துவது?  வெளியே ஓடும் பிராணனை நிறுத்தி உள்ளே திருப்புவது எப்படி ?

எப்படி நிம்மதியாக, அமைதியாக, சாந்தமாக இருப்பது என்று சொல்லித் தருவது இந்த சுலோகம்.

என்ன ஏதோ ரியல் எஸ்டேட்  விளம்பரம் மாதிரி இருக்கா ?

இல்லை. இந்த ஸ்லோகத்தின் முடிவில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இது வரை சொன்னதை யோசித்துக் கொண்டிருங்கள்...நாளை வரை....

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

Friday, August 9, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 1

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 1

बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥

bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

சுத்தமா ஒண்ணும் புரியல. என்ன இது ஏதோ புதிர் போல இருக்கிறதா?

அது தான் பதஞ்சலி.

பல புராணங்கள், சாத்திரங்கள், உபநிடதங்கள் எல்லாம் நாளடைவில் பல   மாற்றங்கள்  அடைந்தன. சொற்களின் பொருள்கள் மாறின. பல இடைச் செருகல்கள்  நிகழ்ந்தன. எது உண்மை, எது பின்னாளில் யாரோ சேர்த்தது என்ற குழப்பங்கள் வந்தது.

பார்த்தார் பதஞ்சலி, தன்னுடைய சூத்திரங்களை  மிக மிக நெருக்கமாக, அடர்த்தியாக, இன்னொரு வார்த்தை அதில் புக புடியாதபடி எழுதிவிட்டார். இதில் ஒரு வார்த்தையை  எடுக்கவோ, மாற்றவோ, குறைக்கவோ முடியாது. பதஞ்சலி எப்படி   எழுதினாரோ, அப்படியே இருக்கிறது.

ஆனால், இவ்வளவு சுருக்கமாகச் சொன்னால், புரிவது கடினமாகி விடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிரித்து உணர வேண்டும்.

இது மிக மிக முக்கியமான சூத்திரம், ஆழமான சூத்திரம்.  உங்கள் வாழ்வின் அடி ஆழத்தை தொடும் சூத்திரம்.

உங்களுக்கு பொறுமை இருக்கிறதா?

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html