Friday, August 9, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 1

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 1


बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥


bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.


சுத்தமா ஒண்ணும் புரியல. என்ன இது ஏதோ புதிர் போல இருக்கிறதா?

அது தான் பதஞ்சலி.

பல புராணங்கள், சாத்திரங்கள், உபநிடதங்கள் எல்லாம் நாளடைவில் பல   மாற்றங்கள்  அடைந்தன. சொற்களின் பொருள்கள் மாறின. பல இடைச் செருகல்கள்  நிகழ்ந்தன. எது உண்மை, எது பின்னாளில் யாரோ சேர்த்தது என்ற குழப்பங்கள் வந்தது.

பார்த்தார் பதஞ்சலி, தன்னுடைய சூத்திரங்களை  மிக மிக நெருக்கமாக, அடர்த்தியாக, இன்னொரு வார்த்தை அதில் புக புடியாதபடி எழுதிவிட்டார். இதில் ஒரு வார்த்தையை  எடுக்கவோ, மாற்றவோ, குறைக்கவோ முடியாது. பதஞ்சலி எப்படி   எழுதினாரோ, அப்படியே இருக்கிறது.

ஆனால், இவ்வளவு சுருக்கமாகச் சொன்னால், புரிவது கடினமாகி விடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிரித்து உணர வேண்டும்.


இது மிக மிக முக்கியமான சூத்திரம், ஆழமான சூத்திரம்.  உங்கள் வாழ்வின் அடி ஆழத்தை தொடும் சூத்திரம்.

உங்களுக்கு பொறுமை இருக்கிறதா?

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html



No comments:

Post a Comment