யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 6
बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥
bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥
bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய
மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.
இந்த மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி இதெல்லாம் எப்படி செய்வது.. அதற்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா ?
எவ்வளவு நேரம் இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும், எவ்வளவு நேரம் விட விடும், பின் எவ்வளவு நேரம் வெற்றிடமாக வைக்க வேண்டும் ?
இது பற்றி ஏதாவது கணக்கு இருக்கிறதா என்றால் இருக்கிறது.
அதுவும் இந்த ஸ்லோகத்திலேயே
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய
அது தான் கணக்கு.
அந்த கணக்கை நாளை பார்க்கலாமா ?
என்ற கேள்வியோடு நேற்று முடித்து இருந்தோம். இன்று தொடர்வோம்
இந்த மூச்சு பயிற்சியை இரண்டாக பிரிக்கிறார் பதஞ்சலி. அந்த இரண்டிலும் இரண்டு உட்பிரிவுகள். மொத்தம் நாலு வகை.
முதல் பெரும் பிரிவு - இடம் மற்றும் காலம்
அது என்ன இடம் , காலம்.
நீங்கள் மூச்சை வெளியே விடும் போது அது எவ்வளவு தூரம் செல்கிறது என்று பாருங்கள். வேகமாக விட்டால் சற்று அதிக தூரம் போகும். மெல்ல விட்டால் அது குறைந்த தூரம் போகும். எவ்வளவு தூரம் செல்கிறது அவ்வளவு இடத்தை அது அடைக்கிறது. அந்த இடத்தை கடக்கிறது.
அதே போல் மூச்சை உள்ளே இழுக்கும் போது எவ்வளவு தூரத்தில் உள்ள காற்றை உள்ளே இழுக்கிறோம் என்று பார்க்க வேண்டும். மெல்ல இழுத்தால் மூக்குக்கு அருகில் உள்ள காற்று மட்டும் உள்ளே போகும். அது நுரையீரலின் தரையை தொடாது. மேலோட்டமாக கொஞ்சம் நிறையும். அவ்வளவுதான்.
அதே போல, காலம்.
எவ்வளவு நேரம் உள்ளே இழுக்கிறோம், இழுத்து வைத்து இருக்கிறோம், எவ்வளவு நேரம் வெளியே விடுகிறோம், விட்ட பின் காலியாக எவ்வளவு நேரம் வைத்து இருக்கிறோம் இந்த நாலு கால அளவையும் பார்க்க வேண்டும்.
இழுப்பது
இழுத்து உள்ளே வைப்பது
வெளியே விடுவது
விட்டபின் காலியாக வைத்து இருப்பது
சரி, இதை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் இழுக்க வேண்டும், வைக்க வேண்டும், விட வேண்டும், பின் காலியாக வைக்க வேண்டும்?
அடுத்த இரண்டு வார்த்தைகளைப் பாருங்கள்
paridṛṣṭa - தெரிகிறது
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய
அதாவது இந்த மூச்சு இழுத்து விடும் இந்த செயல் வெளிப்படையாகத் தெரியும் (paridrsta) அல்லது மென்மையாக செய்வதே தெரியாமல் இருக்கும் (சூட்சம)
சில பேர் பிராணாயாமம் செய்வதைப் பார்த்தால் ஏதோ கொல்லன் உலையில் காற்று அடிப்பது போல இருக்கும். வேர்க்க விறுவிறுக்க செய்வார்கள்.
யோக சாஸ்த்திரத்தின் அடிப்படையே
ஸ்திரம் - சுலபம்
easy and steady
வலி இருக்கக் கூடாது. ஆசனம் செய்கிறீர்களா ? வலித்தால் நீங்கள் செய்வது தவறு என்று அர்த்தம். நடுங்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வேண்டும்.
இன்று ஒரு சூரிய நமஸ்காரம். நாளை இரண்டு. என்று மெதுவாக ஆரம்பித்து மேலே போக வேண்டும். அது போல உடலை தயார் செய்ய வேண்டும். நேரே போய் , பணம் கட்டியாச்சு , நாளை முதல் 108 சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கக் கூடாது.
இந்த மூச்சுப் பயிற்சியும் அப்படி இருக்க வேண்டும். ஸ்திரம் சுலபம்.
வெளிப்படையாக இருந்து சூட்சுமமாக மாற வேண்டும். செய்வதே தெரியக் கூடாது.
வேலை செய்யும் போதும் இந்த மூச்சு பயிற்சி தொடரலாம். சமைக்கும் போது, குளிக்கும் போது, நடை பயிலும் போதும் இது பாட்டுக்கு தொடரலாம்.
இந்த நான்கையும் தாண்டி பிராணாயாமத்தில் அடுத்த ஒன்றை சொல்கிறார் பதஞ்சலி.
அது அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது.
இந்த சுலோகம் இதோடு முற்றுப் பெறுகிறது.
மனதுக்குள் உள் வாங்கி, முயற்சி செய்து பாருங்கள்.
https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-5_16.html
----------------------------------------------------------------------
முதல் ஐந்து பகுதிகளை இங்கே காணலாம்
https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-5.html
------------------------------------------------------------------------------------
முதல் நான்கு பகுதிகளை கீழே காணலாம்.
https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-4.html
முதல் மூன்று பகுதிகளை கீழே காணலாம்.
------------------------------------------------------------------------------
பாகம் 3
https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html
----------------------------------------------------------------------------------------------
பாகம் 2
https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------
பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.
https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html
No comments:
Post a Comment