யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 5
अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥
ahiṁsā-satya-asteya brahmacarya-aparigrahāḥ yamāḥ ॥30॥
ahiṁsā = அகிம்சை
satya = சத்யம்
asteya = திருடாமை
brahmacarya = ப்ரம்மச்சாரியம்
aparigrahāḥ = தன்னடக்கம்
yamāḥ = இயமம்
அகிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சாரியம் பற்றி இதுவரை சிந்தித்தோம்.
அடுத்தது, aparigrahāḥ. இதற்கு தன்னடக்கம், பற்றின்மை, துறத்தல், என்று பல பொருள் உண்டு.
அனைத்தும் குறிப்பது ஒன்றைத்தான்.
தன்னடக்கத்திற்கு எதிரான தற்பெருமை எப்படி வருகிறது ?
நான் பெரிய பணக்காரன், நான் பெரிய அறிவாளி, நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணங்களால் வருகிறது.
ஏதோ ஒன்றையோ அல்லது பலவற்றையோ நாம் சொந்தம் கொண்டாடுவதால் தற்பெருமை, ஆணவம் வருகிறது. அவற்றை விட்டு விட்டால் , ஆணவம் போய்விடும். அடக்கம் வந்து விடும்.
அதற்காக இருக்கிற செல்வத்தையெல்லாம் தானம் வழங்கிவிட்டு, துறவியாக போய் பிச்சை எடுக்கச் சொல்லவில்லை யோக சாத்திரம்.
செல்வம் இருக்கிறதா, இருந்துவிட்டுப் போகட்டும். அனுபவித்துக் கொள் .
படிப்பறிவு இருக்கிறதா, இருந்துவிட்டுப் போகட்டும். மகிழ்ச்சியாக இரு.
ஆனால் , என்னிடம் செல்வம் இருக்கிறது, அறிவு இருக்கிறது என்று அவற்றின் மேல் பற்று கொள்ளாதே.
ஏன் னென்றால், பற்று வந்து விட்டால், அதை பெரிதாக வளர்க்கத் தோன்றும். இன்னும் பணம் வேண்டும் என்று மனம் அலையும். நம்மை விட இன்னொருவன் அதிகம் வைத்திருக்கிறான் என்றால், அவன் மேல் பொறாமை வரும். நம்மிடம் உள்ளதை வேறு யாராவது எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் வரும்.
மனம் அந்த செல்வத்தை காப்பதிலும், பெருக்குவதிலுமே சென்று விடும்.
எனவேதான், அடக்கமாக இரு என்கிறது யோக சாத்திரம்.
அடக்கம் அமரருள் உய்க்கும் என்பார் வள்ளுவர்.
மேலும் சிந்திப்போம்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/230-5.html
No comments:
Post a Comment