யோக சூத்திரம் - 2.16 - எந்தத் துன்பங்களை தவிர்ப்பது ?
हेयं दुःखमनागतम् ॥१६॥
heyaṁ duḥkham-anāgatam ॥16॥
heyaṁ = தவிர்த்தல்
duḥkham = துக்கம்
anāgatam = எதிர்காலம்
எதிர் காலத்தில் வரும் துன்பங்களை தவிர்க்கலாம்.
எதிர் காலம் இன்னும் வரவில்லை. எதிர் கால துன்பம் என்று ஒன்று கிடையாது. பின் ஏன், பதஞ்சலி எதிர் கால துன்பங்களை தவிர்க்கலாம் என்கிறார் ?
வாழ்க்கை என்பது துன்பங்கள் நிறைந்தது.
பரிணாமம், தாபம், சம்ஸ்காரம் இவற்றினால் துன்பம் விளைகிறது என்று பார்த்தோம்.
நிகழ்ந்த துன்பங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவை நடந்து முடிந்து போனவை. ஆனால், நாம் அவற்றை விடுவது இல்லை. நடந்து முடிந்த துன்பங்களை மீண்டும் மீண்டும் நினைத்து மேலும் துன்பப் படுகிறோம்.
"அன்னிக்கு அவன் அப்படி செய்தானே "
"அவள் அன்று அப்படி சொன்னாளே "
என்று பழசை நினைத்து மேலும் துன்பப் படுகிறோம்.
முதலில் அதை நிறுத்த வேண்டும். நடந்து முடிந்த துன்பங்களை எப்போதும் இழுத்துப் போட்டுக் கொண்டு மீண்டும் துன்பப் படக் கூடாது.
இரண்டாவது, எதிர் காலத்தில் வரப் போகும் துன்பங்களை நாம் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியும் .
நடந்து முடிந்ததை ஒண்ணும் பண்ண முடியாது.
இனி வரும் துன்பங்களை எப்படி விலக்குவது என்று பதஞ்சலி சொல்லப் போகிறார்.
வாருங்கள், கேட்போம்.
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/216.html
No comments:
Post a Comment