யோக சூத்திரம் - 2.47 - உடம்பே ரிலாக்ஸ் ப்ளீஸ்
प्रयत्नशैथिल्यानन्तसमापत्तिभ्याम् ॥४७॥
prayatna-śaithilya-ananta-samāpatti-bhyām ॥47॥
prayatna = பிரயத்தன , முயற்சி
śaithilya = தளர விடும் போது
ananta = ஆனந்தம்
samāpatti = சமாதி
abhyām = இரண்டும் ॥47॥
மனதும் உடலும் நெகிழ்ந்து இருக்கும் போது சமாதி நிலை அடைய முடியும். அது அளவற்ற ஆனந்தம் தரும்.
śaithilya என்ற அந்த வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் கிடைக்க மாட்டேன் என்கிறது.
Relaxation என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் கிட்ட வருகிறது. இப்போதைக்கு relaxation என்றே வைத்துக் கொள்வோம்.
நமது உடம்பு எந்நேரமும் ஒரு முறுக்கில் (tension ) ஆகவே இருக்கிறது.
காலை எழுந்தவுடன் இந்த பதட்டம் ஆரம்பமாகி விடுகிறது.
அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், என்று ஆயிரம் எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கிறது. மனதில் அழுத்தம் ஏற ஏற உடலில் அது பிரதிபலிக்கிறது.
உடலில் பல ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கிறது. அவை ஒன்றோடு ஒன்று கலந்து உடலுக்குள் யுத்தம் ஆரம்பிக்கிறது.
உடம்பு relaxed ஆக இருப்பதே இல்லை.
அதற்கு பலப் பல காரணங்கள்.
உணவு முறை. வேலையில் வரும் அழுத்தம். உறவுகள் தரும் அழுத்தம். சரியான ஓய்வு கிடையாது.
ஆசைகள். பொறாமைகள். பயங்கள். சந்தேகங்கள். என்று ஆயிரம் விஷயங்கள் உடலை ரிலாக்ஸ் பண்ண விடுவதில்லை.
ரொம்ப முயற்சி செய்தால்,சில நிமிடங்கள் relaxed ஆக இருக்கலாம். உடனே மனம் சொல்லும் "என்ன சும்மா உக்காந்து கிட்டு இருக்க.. எழுந்திரு...எவ்வளவு வேலை இருக்கிறது...ஓடு " என்று விரட்டும்.
எந்நேரமும் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.
உடம்பை relaxed ஆக வைத்தால் மனமும் relax ஆகும்.
எதிர் காலம் பற்றிய பயம், கனவுகள், சந்தேகங்கள்,ஆசைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த நேரம், இந்த நொடியில் மனதையும் உடலையும் relax ஆக வைக்கப் பழகினால், எல்லை அற்ற ஆனந்தம் வரும் என்கிறார் பதஞ்சலி.
ஆசனம் என்றால் ஸ்திரம் மற்றும் சகஜம் என்று பார்த்தோம்.
அடுத்தது, ஆசனம் என்பது relaxed ஆக இருப்பது.
உடலை வருத்தக் கூடாது. அதை கசக்கிப் பிழியக் கூடாது. அது ஒரு மலர் போல மென்மையாக மலர வேண்டும். உடலில் அழுத்தம் நிகழ்ந்தால் அது மனத்திலும் நிகழும்.
உடலை தளர விடுங்கள். மனதும் மென்மையாகும்.
http://yogasutrasimplified.blogspot.com/2018/05/247.html
śaithilya என்ற அந்த வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் கிடைக்க மாட்டேன் என்கிறது. தமிழில் 'இறுக்கமின்றி' 'தளர்வாக' இசைவாக,
ReplyDelete