யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும்
ततो द्वङ्द्वानभिघातः ॥४८॥
tato dvaṅdva-an-abhighātaḥ ॥48॥
tato = அப்போது
dvaṅdva = இருமைகள்
an = இல்லை
abhighātaḥ = தோற்கும்
எப்போது உடல் relaxed ஆக இருக்கிறதோ, அப்போது இருமைகள் தோற்று அழியும்
நமது உடலில் தலை, கழுத்து, மார்பு, வயிறு என்றெல்லாம் இருக்கிறது அல்லவா ?
தலை எங்கே முடிகிறது? கழுத்து எங்கிருந்து தொடங்குகிறது ?
கழுத்து எங்கே முடிகிறது? மார்பு எங்கிருந்து தொடங்குகிறது?
அங்கே ஏதாவது கோடு போட்டு இருக்கிறதா ? இது வரை தலை, இதற்குப் பின் கழுத்து என்று?
இல்லை.
இருந்தும் நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்து இருக்கிறோம்.
உடம்பு ஒன்று தான். அதில் பிரிவு என்பதே கிடையாது.
காரில் இருப்பது போல இது டையர் , இது கதவு, இது brake , என்று உதிரி பாகங்கள் கிடையாது. உடம்பு பூராவும் ஒன்று தான்.
இதன் அடுத்த நிலை, நாம் உடம்பு வேறு, மனம் வேறு என்று பிரித்து வைத்து இருக்கிறோம்.
இவை இரண்டு அல்ல ஒன்று தான். உடலும் மனமும் ஒன்று சேர்ந்தததுதான் நாம்.
Psychosomatic என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். உடலும் மனமும் ஒன்று சேர்ந்த கலவை நாம்.
எனவே உடல் அசைந்தால் மனம் அசையும், மனம் அசைத்தால் உடல் அசையும்.
மனதை நம்மால் நேரடியாக கட்டுப் படுத்த முடியாது. எனவே, உடலை relaxed ஆக வையுங்கள் என்கிறார்.
சரி அப்படி வைத்தால் என்ன ஆகும் ? எதற்காக அப்படி வைக்க வேண்டும்?
அப்படி வைத்தால், இருமைகள் மறையும் என்கிறார்.
அது என்ன இருமை?
இன்பம், துன்பம்
நல்லது கெட்டது
உயர்ந்தது தாழ்ந்தது
பாவம் புண்ணியம்
என்று வாழ்வில் பல இமைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் போய் விடும் என்கிறார்.
அது எப்படி போகும்?
அப்படியே போனாலும், அது நல்லாவா இருக்கும். பாவமும் புண்ணியமும் போய் விட்டால் பின் பாவம் செய்யலாமா? எதுக்கு புண்ணியம் செய்யணும் ?
இப்படிப் பட்ட கேள்விகள் எல்லாம் வரும். அதுக்கு என்ன பதில் ?
http://yogasutrasimplified.blogspot.in/2018/05/248.html
No comments:
Post a Comment