யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 4
यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥
yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥
yama = இயமம் = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்
niyama = நியமம் = கடைபிடித்தல்
āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை
prāṇāyāma = பிராணாயாமம்
pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்
dhāraṇā = தாரணம் = மனதை ஒருமுகப் படுத்துதல்
dhyāna = தியானம்
samādhayo = சமாதி
'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்
இயமம், நியமம், ஆசனம் தாண்டி அடுத்தது பிராணாயாமம்.
பிராணாயாமம் என்பது மூச்சு உள்வாங்கி விடுதலில் உள்ள ஒழுங்கு.
நம் மன நிலைக்கு தகுந்தவாறு மூச்சும் மாறுகிறது.
கோபமாக இருக்கும் போது மூச்சு ஒரு விதமாக இருக்கும்.
சோகமாக இருக்கும் போது , மூச்சு வேறு விதமாக இருக்கும்.
மனதில் அன்பும், காதலும் வரும் போது மூச்சு மற்றொரு விதமாக இருக்கும்.
இதில் முக்கியமானது என்ன என்றால், மன நிலைக்கு தகுந்தவாறு மூச்சு விடுவது இருப்பது போல, மூச்சு விடுவது மாறும் போது மன நிலையம் மாறும்.
மூச்சை மாற்றினால் மனம் மாறும்.
மூச்சை மாற்ற வேண்டும் என்றால், உடல் நேராக வேண்டும். முதுகு தண்டு நிமிர வேண்டும். அதற்கு ஆசனம் உதவும். ஆசனம் செய்ய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு முறை வேண்டும். அதற்கு இயம நியமங்களை கடை பிடிக்க வேண்டும்.
கவனித்துப் பாருங்கள் , உங்கள் மூச்சு விடும் விதம் நாளில் பல தடவை மாறிக் கொண்டே இருக்கும். மூச்சு எப்படி மாறுகிறதோ அப்படி மன நிலை மாறும்.
இந்த பதற்றம், டென்ஷன் , எல்லாம் மூச்சோடு சம்பந்தப் பட்டது.
மூச்சை கட்டுக்குள் கொண்டு வந்தால், மனம் வசப்படும்.
மனதை வசப்படுத்துவது ஒரு முடிவு அல்ல. அதற்கு மேலும் சில படிகள் இருக்கின்றன.
அவற்றையும் சிந்திப்போம்.
http://yogasutrasimplified.blogspot.com/2018/02/229-4.html
No comments:
Post a Comment